அதனைத் தொடர்ந்து வருடாந்த பொதுக் கூட்டத்தின் முக்கிய நிகழ்வான சிறப்பு அதிதி பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களின் சிறப்பு உரை நிகழ்த்தப்பட்டது. "இளைஞர்கள் விழிப்புணர்வு வழங்குவதை போலவே தொடர்ந்தும் சூழலை பாதுகாக்கும் செயல் திட்டங்களை வினைத்திறனாக செயல்படுத்த வேண்டும் எனவும்; இவ்வாறான அமைப்புகளின் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எமது நாட்டின் நிலைத்திருக்கக்கூடிய எழுச்சிக்கு பங்களிக்க கூடும்" எனவும் அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
உரையின் நிறைவில் பேராசிரியர் அவர்களுக்கு Mission Green SriLanka வின் தலைவர் அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து Mission Green SriLanka வின் புதிய மைல் கல்லான missiongreensl.org இணையத்தளம் சிறப்பு அதிதி பேராசிரியர் chandhane abeyrathne அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அடுத்து, Mission Green SriLanka வின் புதிய தலைவர் Sajeed Ahamed அவர்களின் தலைவர் பதவி ஏற்கும் நிகழ்வு மற்றும் புதிய தலைவரின் கன்னி உரை என்பன இடம்பெற்றன .
இறுதி நிகழ்வாக ,புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அறிமுகம் இடம்பெற்றதோடு நன்றி உரையுடன் வருடாந்த பொதுக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
இந்நிகழ்விற்கு ஆதரவு வழங்கிய ஆலோசனை குழு அங்கத்தவர்கள், சகோதரர் ஷங்கர், சகோதரர் ஹிசாம் மற்றும் அழைப்பை ஏற்று வருகை தந்திருந்த அனைவருக்கும், இவ்வமைப்பின் வளர்ச்சிக்காய் இணைந்து செயற்படுகின்ற அனைத்து சூழல் நேயம் கொண்ட அங்கத்தவர்களுக்கும் Mission Green SriLanka குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாளைய தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் ஒரே செல்வம் மாசற்ற ஆகாயமும்,குடிப்பதற்கு உகந்த நீரும், ரசாயனமற்றம் மண்ணும் தான். இவற்றை தக்கவைப்பதில் ஒரு சிறு அங்கமாய் செயற்பட்டு கொண்டிருக்கும் Mission Green SriLanka தனது சேவையை தொடர வாழ்த்துக்கள்.