மருத்துவம் சம்பந்தமான கற்கை நெறிகளை வெற்றிகரமாக வழங்கி வரும் கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் விழா

 



( மினுவாங்கொடை நிருபர் 

   2010 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவம் சம்பந்தமான கற்கை நெறிகளை வெற்றிகரமாக வழங்கி வருகின்ற கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரி கொழும்பு, கம்பஹா, கண்டி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கிளைக் கல்லூரிகளாக இயங்கி வருகின்றன. 

இக்கல்லூரிகளில், மருத்துவத் தாதிக் கற்கை நெறி, மருத்துவ ஆய்வு கூட கற்கை நெறி, மருந்தாளர் கற்கை நெறி, இயென் (Physiotherapy) மருத்துவக் கற்கை நெறி மற்றும் உளவியல் கற்கை நெறிகளை, பல்கலைக் கழக நுளைவு தவறிய மாணவர்களுக்கு வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது. 

   டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு (Degree) ஆகவும் வழங்கி வருகிறது. அம்பாறை, மருதமுனை பிராந்தியத்தில் இயங்கி வரும் அய்வா (IWA) கல்லூரியுடன் இணைந்து உளவியல் துறை கற்கை நெறிகளை இக்கல்லூரி இணைந்து நடாத்தி வருகிறது. 

   அந்த வகையில், உளவியல் துறையில் சான்றிதழ் கற்கை நெறியையும், டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம், மார்ச் மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமையன்று, மருதமுனை பொதுநூலக வீதியில் அமைந்துள்ள பொதுநூலக கேட்போர் கூடத்தில்,  கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரியின் பணிப்பாளர் மனநல மருத்துவர்  (Psychiatrist)  டாக்டர் எம்.எச்.எம். முனாஸிக்  தலைமையில் நடைபெற்றது.

   பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய மற்றும் அரபிக் பிரிவின் முன்னாள் பீடாதிபதி டாக்டர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், கெளரவ அதிதிகளாக தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உதவிக் கணக்காய்வாளர் எம்.எச். ஷபீக் மற்றும் சட்டத்தரணி முஹைதீன் முஹம்மத் நப்ஸர், விசேட அதிதிகளாக மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் பெண்கள் பிரிவின் உதவி அதிபர் றிஸானா லுத்பி ஹுஸைன் மற்றும் தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் அரபிக் பிரிவின் பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி எம்.சீ.எஸ். சதீபா, விரிவுரையாளர் அப்துர் ரஹ்மான் பிர்தெளஸியா பேகம், மருத்துவக் கல்லூரியின் பிரதான பதிவாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

   உலகில் முதன்முறையாக  எலக்ட்ரோனிக் வெள்ளைப்பிரம்பு கண்டுபிடிப்பாளரான மருதமுனையைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் எம்.ரீ.எம். ஜினான் சுவாரஸ்யமாக நெறிப்படுத்திய இச்சிறப்பு நிகழ்வில், ஸ்ரீல.சு.க. கல்முனை தொகுதி அமைப்பாளர் கலாநிதி பஸீர் ஹுஸைன், ஸ்ரீல.சு.க. அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கலீலுர் ரஹ்மான் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.



( ஐ. ஏ. காதிர் கான் )

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.