மசகு எண்ணெய் விலையில் மாற்றம்


ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, எரிபொருள் விலைகள் கணிசமாக குறைந்துள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 2.69 அமெரிக்க டொலர்கள் (3.76%) குறைந்து 68.79 டொலர்களாக பதிவாகியுள்ளது. இது ஜூன் 11, 2025க்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த விலையாகும்.

இதற்கு முன்னதாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு முயற்சிப்பதாக எழுந்த அச்சத்தால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக, நேற்று (23) உலகளாவிய எரிபொருள் விலைகள் 3% உயர்ந்து, ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 79 டொலர்களாக காணப்பட்டது.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் எரிபொருள் தொடர்பான நெருக்கடி ஏற்படும் பட்சத்தில், அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து எண்ணெய் மாதிரிகளை பரிசோதிக்கவும் CPC திட்டமிட்டுள்ளது.

இந்த உலகளாவிய எண்ணெய் நெருக்கடியின் தாக்கம் வரவிருக்கும் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உணரப்படலாம் என்று CPC தெரிவித்துள்ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.