புத்தள பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் ஒரு லட்சம் கிலோமீட்டர்
பாதையின் வேலைகள் ஏப்ரல் (4)ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டமானது அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வேண்டு கோளுக்கிணங்க வான் சந்தியிலிருந்து செம்மான் திடல் , சமகி மாவத்தை வரையான கார்பட் (3.5 கி மீ) பாதையிடும் வேலைத்திட்டத்தை அவர் ஏப்ரல் (04) ம் திகதி ஆரம்பித்து வைத்தார்.
அந்தவகையில் அடுத்த வேலைகள் முதலைப்பாளி, முள்ளிபுரம், கரைத்தீவு என இணைந்த பல பிரதேசங்களிலும் விரைவில் பாதைகள் ஆரம்பிக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை அதற்கான வேலைகளை திட்டமிட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.