நாட்டின் நிலைமையை கருதி ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை


குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும், மத ஸ்தலங்கள், அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சூரிய ஒளி கூரை அமைப்புகளை வழங்கவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்..

அத்துடன் ,அண்மையில் மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் எவ்வித தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மின்சார சபை முன்வைத்த புதிய மின் கட்டண உயர்வு யோசனைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் எதிர்த்தாலும், ஏனையோர் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந் நிலையில் மின்சார கட்டணம் நேற்று 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 66% அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.