படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி போராட்டம்!


மட்டு. துஷாரா

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான மக்கள் போராட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெறவுள்ளது.
இதில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவுகளை வழங்கி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.