2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் - பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்


இரண்டு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருளை பெறுவதற்கான திட்டத்தை உறுதி செய்துள்ளதால் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

"எந்த பிரச்சனையும் இல்லாமல் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்யவுள்ளோம் என்பதை பொதுமக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். இந்த எரிபொருள் இறக்குமதி உறுதி செய்யப்பட்டுள்ளன. எந்த காரணத்தாலும் இந்த நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை இருக்காது. 

அதன் பின்னர் எங்கிருந்து எரிபொருள் பெறுவது என்பதுதான் பிரச்சினை. பின்னர் போரின் தாக்கம் எரிபொருள் விநியோகத்தை பாதித்துள்ளதா என்பதைப் ஆராய வேண்டும்."

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்தார்.

"எங்களிடம் உள்ள அறிக்கைகளின்படி, 92 ஒக்டேன் பெட்ரோலில் பெரும்பாலானவை போர் நடைபெறும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை.

 அந்த எண்ணெய் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து எங்களுக்கு வருகிறது. ஓமானிலிருந்து ஒன்று மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டாலும், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. அதன் சப்ளையர்களிடம் பேசி எரிபொருள் இறக்குமதியை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளோம். என அவர் தெரிவித்தார்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.