புனித மிஃராஜ் தின நிகழ்வு நாளை கொழும்பில்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

புனித மிஃராஜ் தின நிகழ்வு நாளை (18) சனிக்கிழமை இரவு கொழும்பு - 12, கெஸல்வத்தை அல் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசலில் இரவு 8 மணி முதல் இடம்பெறவுள்ளது.

இந்நகழ்வானது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு -12, கெஸல்வத்தை அல் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசலுடன் இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் தலைமையில் இடம்பெறும் மேற்படி நிகழ்வுக்கு முஸ்லிம் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்ளான அன்வர் அலி, அலா அஹமட் உட்பட திணைக்கள அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உலமாக்கள், அரச உயர் அதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும் ஜமாஅத்தார்கள் எனப்பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் கொழும்பு -12, கெஸல்வத்தை அல் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசலில் இருந்து இந்நிகழ்வுகள் யாவும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நேரடி அஞ்சல் செய்யப்படவுள்ளதாகவும் இதற்கான  ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.முப்தி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.