ஹஸ்பர்
தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கலைஞர்களுக்கான மரக் கன்றுகள் வியாழக்கிழமை (15)ம் திகதி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வானது கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "பன்னிரெண்டு மாத விளக்கு" வேலைத்திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த 25 கலைஞர்களுக்கு இது வழங்கி வைக்கப்பட்டது.
மாதுளை,கொய்யா,ஜம்பு,தேசி உள்ளிட்ட மரக் கன்றுகளே இதன் போது வழங்கப்பட்டன.
இதில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,நிருவாக உத்தியோகத்தர் உடகெதர,கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.மேனகா,கலைஞர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.