தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு மூன்றாமிடம்


ஹஸ்பர்

தேசிய உற்பத்திதிறன் செயலகத்தால் அரச திணைக்களங்களுக்கிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தி திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு  கொழும்பில் 15.12.2022   நடைபெற்றது.

இதில்  தம்பலகாமம் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்டது.

 கொழும்பு அலரி மாளிகையில் இடம் பெற்ற விருது வழங்கல் வைபவத்தில் பிரதம அதிதியாக பிரதம மந்திரி தினேஸ் குணவர்தன கலந்து கொண்டார்.

இதன் போது  தொழில் உறவுகள் அமைச்சர் மனுச நாணயக்காரமிடருந்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி இதற்கான விருதினை பெற்றுக் கொண்டார்.

பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் அவர்களும் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.