ஹட்டன் வலய அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களைச் சந்திக்கிறார் கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த குமார்


கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த குமார் ஹட்டன் வலயக் கல்வி பணிமனைக்குள் வரும் பாடசாலைகளின் அதிபர்களையும் ஆசிரியர் ஆலோசகர்களையும் சந்தித்துரையாடவுள்ளார்.

இச்சந்திப்பு நாளை திங்கட்கிழமை (19) காலை 10 மணிக்கு ஹட்டன் ஹைலெண்ட் மத்தியக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இச்சந்திப்பை ஹட்டன் வலயக் கல்விப் பணிமனை ஏற்பாடு செய்துள்ளது.

(தகவல் - கல்வி இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.