அவசர சிகிச்சை பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் – சுகாதார அமைச்சு


கொரோனா நோயாளர்களில் 83 பேர் இதுவரையில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிகிச்சை மத்திய நிலையங்களில் 382 நோயாளர்கள் ஒக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக கொவிட் – 19 தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஒக்சிஜன் தேவையுடைய நோயாளர்களின் எண்ணிக்கை 1,100 ஆக அதிகரித்திருந்தது எனவும் நாட்டில் 275 கொரோனா சிகிச்சை நிலையங்கள் தற்போது இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.