செளபாக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு கல்முனையில் சமுர்த்தி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக கடனுதவி

செளபாக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது

இதற்கமைய கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக செளபாக்கிய வார  தேசிய வேலைத் திட்டத்தின்  கீழ்  தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கடனுதவித்தொகை வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி காரியாலயத்தில் 

வங்கி முகாமையாளர் மோசேஸ் புவிராஜ் தலைமையில் இன்று  மதியம் (28)இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட  சிரேஷ்டமுகாமையாளர்  எ. ஆர். எம். சாலிஹ் கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா,சமுர்த்தி மகாசங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா   மற்றும் கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் எம். ஐ. எம். முஜீப் , சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களான எம். டி . அமினுத்தீன், எம். எஸ். ரிபாயா, எஸ். தாயனந்தி , எம். எல். மர்ழியா ஆகியோர் இணைந்து குறித்த பயனாளிகளுக்கான  கடனுதவி தொகை யினை வழங்கி வைத்தனர்.

செளபாக்கிய தேசிய வாரம் இம்மாதம்23ம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரஅனுஷ்டிக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.