புவனேஸ்வர்:
திருமண வரவேற்பின்போது மணமகள் குடும்பத்தார் இறைச்சிக் கறிக்குழம்பு பரிமாறவில்லை என்ற காரணத்தை முன்வைத்து மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்தவர் ராமகாந்த் பத்ரா. 21 வயதான இவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் திருமண விருந்துக்காக பந்தோகான் கிராமத்துக்கு தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் வருகை தந்தார் ராமகாந்த். அப்போது உணவுப் பரிமாறும் கூடத்தில் இறைச்சிக் கறிக்குழம்பு இல்லை என்பதை அறிந்தார் ராமகந்த்.
இதனால் கடும் கோபமடைந்த அவர், முன்பே வாக்குறுதி அளித்தபடி ஏன் கறிக்குழம்பு பரிமாறவில்லை என்று மணமகளின் குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மணமக்களின் குடும்பத்தார் எவ்ளவவோ கெஞ்சிப் பார்த்தும் சமாதானமடையாத ராமகாந்த், திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
மேலும் மறுநாளே வேறொரு பெண்ணை அவர் திருமணம் செய்தது தெரிய வந்தது.
இந்தியாவில் அற்ப விஷங்களுக்காகத் திருமணத்தை நிறுத்துவது என்பது புது வழக்கமாக உருவாகி வருகிறது.
அண்மையில்கூட உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணமகனால் நாளேடுகளை முகக் கண்ணாடி உதவியின்றி படிக்க முடியவில்லை என்ற காரணத்தை முன்வைத்து மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறியது