இலங்கை கட்டிடப் பொருள் கூட்டுத்தாபனத்தின் (BMC)நவீனமயப்படுத்தப்பட்ட மிகச் சிறந்த விற்பனை நிலையம் திறந்து வைப்பு.



கொழும்பு -12, சிறீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை கட்டிடப் பொருள் கூட்டுத்தாபனத்தின் (BMC) நவீனமயப்படுத்தப்பட்ட  மிகச் சிறந்த விற்பனை நிலையம் மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் தலைமையில் மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள்  தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த அவர்களினதும் பங்குபற்றுதலுடன் இன்று  (05)   திறந்து வைக்கப்பட்டது.


1971ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை கட்டிடப் பொருள் கூட்டுத்தாபனத்தின் பிரதான காரியாலயம் சுமார் 50 வருட காலத்தை அண்மித்த போதும் நவீனமயப்படுத்தப்படவில்லை. விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் ஆலோசனையின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த அவர்களினால் இந்த விற்பனைக் நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.


நிர்மாணத்துறையில் உள்ள அனைத்து கட்டிடப் பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் சலுகை விலையில் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில்  Mini Super Concept என்ற எண்ணக்கருவின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   


இந்த விழாவில் உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு இலங்கை கட்டிடப் பொருள் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களின் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட வரைதல் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் கீர்த்தி அபேகுணவர்தன, இலங்கை கட்டிடப் பொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மகேந்த்ர விஜேசேகர, அதன் பொது முகாமையாளர் திலும் ரத்நாயக்க, அரச பொறியியல் கூட்டுத்தாபனத் தலைவர் ரத்னசிறி கலுபஹன உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் தலைவர்கள், அரச அதிகாரிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.




முனீரா அபூபக்கர்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.