சில்மியா யூசுப்.
பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையை தளமாகக் கொண்ட பாகிஸ்தான் சமூகம் தனது 81 வது தேசிய பாகிஸ்தான் தினத்தை பாரம்பரிய ஆர்வத்துடன் 23 செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள உயர் ஸ்தாணிகர் ஆலயத்தில் நடைபெற்றது
இந் நிகழ்வு பாக்கிஸ்தான் உயர் ஸ்தாணிகர் மேஜர் ஜெனரல் ( ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டக் அவர்களினால் பாகிஸ்தான் தேசிய கொடி ஏற்றி அங்குரார்ப்பனம் செய்து வைத்தார்.
பாகிஸ்தானை ஒரு வலுவான, துடிப்பான, முற்போக்கான, ஜனநாயக மற்றும் நலன்புரி நாடாக மாற்ற தீர்மானித்துள்ளனர் என பகிஸ்தானின் அதிபர் டொக்டர் ஆரிப் அல்வியின் செய்தியில் குறிப்பிட்டார்.
மேலும் லாகூரில் நிறைவேற்றப்பட்ட 1940 ஆம் ஆண்டு வரலாற்றுத் தீர்மானத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 ஆம் திகதி பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்க ஒரு விடயமாகும் இது துணைக் கண்டத்தின் முஸ்லிம்களுக்கு ஒரு தனி தாயகத்தை கோருகிறது, இது இறுதியில் ஆகஸ்ட் 14, 1947 அன்று பாகிஸ்தானை உருவாக்க வழிவகுத்தது.
ஜனாதிபதி மற்றும் பாக்கிஸ்தான் பிரதமரின் சிறப்பு செய்திகள் வாசிப்பில் அதில் இரு தலைவர்களும் அன்றைய முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, காயிட்-இ-அசாம் முஹம்மது அலி ஜின்னா, டாக்டர் அல்லாமா முஹம்மது இக்பால் மற்றும் பாகிஸ்தான் இயக்கத்தின் பிற தலைவர்களும் இதில் நினைவூட்டப்பட்டன.
இந் நிகழ்வில் இலங்கையை தளமாகக் கொண்ட பாகிஸ்தான் சமூக உறுப்பினர்கள், பல்வேறு தரப்பு பங்கேற்பாளர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்தியாவின் பிடியில் உள்ள கஸ்மீர் மக்களுக்கு சுதந்திரம் பெற்று அவர்கள் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு பிராத்திப்பதோடு இலங்கை - பாகிஸ்தான் நட்புரவு இலங்கையின் பாதுகாப்பு வர்த்தக நட்புரவு பற்றியும் மிக இறுக்கமாக உள்ளதாகவும் இலங்கைக்கு பாக்கிஸ்தானின் உதவி தேவைப்படுமெனில் பாக்கிஸ்தான் உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் உயர் ஸ்தாணிகர் தெரிவித்தார்.