எரிபொருள் வரிசையில் இருந்த மற்றும் ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.
இவர் மீரிகமவில் டீசலுக்கு வரிசையில் நின்ற 76 வயதான முதியவர் ஆவார்.
குறித்த நபர் மூன்று டீசல் கேன்களை நிரப்பிவிட்டு தனது முச்சக்கர வண்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது நிலைகுலைந்து வீழ்ந்துள்ளார்.
பின்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எரிபொருள் வரிசையில் நின்று இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர், தகராறு ஏற்பட்டதால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

