அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அணி மாநாடு.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அணியின் (Acmc youth Wing) கொழும்பு மாவட்ட “இளைஞர் மாநாடு” இன்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் ஏற்பாட்டில் இன்று மட்டக்குளியில் (28) நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன், விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் முஷார்ரப் முதுநபீன் மற்றும் தவிசாளர் அமீர் அலி உள்ளூராட்சி சபை உறுப்பினர்களான ரம்சி ஹாஜியார், ஹசீப் மரைக்கார், ஹிஷாம் மரைக்கார் ACMC இளைஞர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.