மத்திய மாகாணத்தில் கைத்தொழில் அமைச்சினால் நடாத்தப்பட்ட 2020ம் ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர் தரப்படுத்தல் வரிசையில் நடுத்தர பரிமாண உற்பத்தித் துறையில் கம்பளை FOODCO LANKA INDUSTRIES நிறுவனத்திற்கு நட்சத்திர விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு 2021ம்ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் திகதி (நேற்று) GRAND கண்டியன் ஹோட்டலில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017, 2018, 2019 ம் ஆண்டுகளில் மத்திய மாகாண சிறிய பரிமாண உற்பத்தித் துறையில் நட்சத்திர விருது பெற்றுக் கொண்டமை இங்கு நினைவு கூறத்தக்கது.
முக்கியமான இத்தருணத்தில் தங்கள் பயணத்தில் கைகோர்த்துள்ள ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பாவனையாளர்கள், வழங்குனர்கள் அனைவருக்கும் FOODCO LANKA INDUSTRIES நிறுவனம் தமது மகிழ்ச்சியை தெரிவிப்பிதாக அறிவித்துள்ளது.
தகவல்:பின்த் அமீன்