பு/மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

 


சில்மியா யூசுப்

பு/மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான தரம் ஒன்று மாணவர்களை சேர்த்து கொள்ளும் வைபவம்  இன்று (15.02.2021) அதிபர் பஷீர் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் முஹம்மட், பாடசாலை ஆசிரியர்கள்  மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து  சிறப்பித்தனர்.
கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் தரம் 01 மாணவர்கள் உள்வாங்கும் நடவடிக்கைகள் இன்று (15) திகதி முன்னெடுக்கப்பட்டன.
இதில் தரம் ஒன்றுக்கு உள்ளவாங்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் பாலர் புரட்சி எனும் செயற்திட்டத்தின் கீழ் முதன் முறையாக மரக்கன்று ஒன்றும் வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.