சிரச தொலைக்காட்சியில் நடைபெற்ற சிரச லக்ஷபதி நிகழ்ச்சியில் போட்டியிட்டு திறமையாக செயற்பட்டு வெற்றியீட்டிய ஷுக்ரா முனவ்வருக்கு விஷேட கௌரவிப்பு நிகழ்வு கடந்த 2021.02.17 திகதி ஜெய்க் ஹில்டன் ஹொடலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் சட்டத்தரனி அலி சப்ரி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
ஷுக்ரா முனவ்வரின் திறமையினைப் பாராட்டி கொழும்பு அமேசன் கல்லூரியின் சார்பில் கல்லூரி மாணவர்களின் புலமைப்பரிசில் நிதியத்தின் மூலமாக 200,000 ரூபா பெறுமதியான இலவச புலமைப்பரிசில் திட்டமொன்று கல்லூரியின் பணிப்பாளர் திரு. இல்ஹாம் மரைக்கார் அவர்களினால் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ரட பெரட அமைப்பின் தலைவர் கபில எதிரிசூரிய அவர்களும் கலந்து சிறப்பித்தார்.