(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்
கல்வியலாளர் மர்ஹும் ஏ.ஆர்.ஏ.அஸீஸ் பவுண்டேஷனின் நிதி பங்களிப்பில் பாண்டிருப்பு அல்-மினன் வித்தியாலய அதிபர் எஸ்.எச்.சவ்தா ஹார்ஜத்திடம்
பவுண்டேஷனின் தலைவர் கலாநிதி ஏ.ஏ.முகம்மது நுபைல் அவர்களால்
போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று
அன்பளிப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் சுகாதார பொது வசதிகள் பிரிவின் மேற்பார்வையாளர் ஏ.எம்.அஹ்ஸன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.