இலங்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம்.
முதற்தடவையாக இன்று இலங்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வமாக வரைகை தரவுள்ளார்.
இலங்கை வரும் பகிஸ்தான் பிரதமருக்கு இந்திய வான் பரப்பின் ஊடாக பயணிப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாகிஸ்தான் பிரதமர் வரவேற்கப்படவுள்ளார்.
மேலும் விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு கௌரவமளிக்கும் வகையில் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம்பெறவுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இலங்கையில் தங்கியிருக்கும் இரண்டு தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வந்த பின்னர் பாகிஸ்தான் பிரதமரின் நிகழ்ச்சிகள்
- பி.ப. 4.15: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் வரவேற்பு
- பி.ப. 6.00: அலரி மாளிகையில் கலந்துரையாடல்
- பி.ப. 6.30: மணிக்கு கூட்டு ஊடக வெளியீடு
- நாளை மு.ப. 10.30: ஜனாதிபதியுடன் சந்திப்பு
- மு.ப. 11.30: வர்த்தக, முதலீட்டு மாநாடு - ஷங்ரி லா
- பி.ப. 12.30: சபாநாயகர், விளையாட்டு அமைச்சர் பகல் போசணம்
- பி.ப. 12.30: நாவல கிரிமண்டல வீதியில் உயர்தர விளையாட்டு நிலையம் நிர்மாணம் தொடர்பில் பேச்சுவார்த்தை - ஷங்ரி லா
- பி.ப. 3.00: விமான நிலையத்தில் விடைபெறுவார்.