உன்னை நீயே உற்சாகப்படுத்து
உன் இலக்குகளை நோக்கி நீ ஓடும் போது சில சமயம் சோர்வுகள் வந்து உன்னை தாக்கும். உன் முயற்சிகளை அவை தடை செய்யும். அப்போது நீ பிறரை எதிர்பார்த்து நிற்காதே! தன் கையே தனக்கு உதவி என்று உன்னை நீயே உற்சாகப்படுத்திக் கொள். உன் இலக்கினை அடைய நீ எடுத்த முயற்சிகளை எண்ணிப்பார். அவை உன்னை உற்சாகப்படுத்தி உன் இலக்கினை நோக்கி நடைபோட உன்னை உந்தித் தள்ளும் சக்தியாய் இருக்கும்.
உன்னை உற்சாகப்படுத்திக் கொள்ள பிறரை எதிர்பார்த்து நின்று உன் நேரத்தினை வீணாக்கி உன் இலக்கினை அடையும் தூரத்தினை பிற்போடாதே! கடந்து வந்த உன் இலட்சியப் பாதையை கண் முன்னே கொண்டுவந்து பார். உன் இலக்கினை அடையும் தூரம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்ந்து கொள்வாய். அதுவும் உன்னை உற்சாகமூட்டும் முன்நோக்கி செல்லவும் வழிவகுக்கும்.
உன்னால் முடியும் என்று அடிக்கடி உனக்குள்ளே சொல்லிக்கெண்டிரு. உன் கனவு நனவாகும் தருணத்தினை உன் மனக்கண்ணில் கொண்டுவந்து பார். உன்னுள்ளே உற்சாகம் ஊற்றெடுக்கும். சோர்வுகள் விலகும். நீ பயணப்படும் பாதை நோக்கி உன் பாதங்கள் நகரும். உன்னை நீயே உற்சாகப்படுத்திக் கொள். உயரங்கள் தொட்டிடுவாய் நீ!

