அமைச்சர் வாசுதேவ நானாயக்காரர் அவர்களுக்கு இன்று கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அமைச்சர் சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களான தயசிறி ஜெயசேகர மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்குப் பின் கடந்த சில நாட்களில் கொவிட் சோதனை உறுதி செய்யப்பட்ட 3வது பாராளுமன்ற உறுப்பினராவார் என்பது குறிப்பிடதக்கது.

