நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்.



 நாட்டில் நேற்றைய தினம் 535 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொரோனா தடுப்பு செயலணி குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 148 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாரேயன்பிட்டிய பகுதியில் 30 பேரும், அவிஸ்ஸாவலை பகுதியில் 22 பேரும், மட்டக்களிய பகுதியில் 16 பேரும் அதிகபட்சமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், புளூமெண்டல் பகுதியில் 15 பேரும், பொரளை பகுதியில் 14 பேரும், தெமட்டகொடை பகுதியில் 7 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 763 தாண்டியுள்ளது..

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சீதுவ பகுதியில் 9 பேரும் , கிரிபத்கொட பகுதியில் 8 பேரும் இவ்வாறு தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கண்டி மாவட்டத்தில் 111 பேரும், கேகாலை மாவட்டத்தில் 64 பேரும் தொற்றுடன் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தொடர்ந்தும் 6 ஆயிரத்து 773 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக 17 ஆயிரத்து 217 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுள்ளன.

இதேவேளை, முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் 76 தனிமைப்படுத்தல் நிலையங்களில், 6 ஆயிரத்து 150 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.