கொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் புதைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்படுதால் அதற்கெதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இவ்வருடத்திற்கான அமர்வு அடுத்தமாதம் ஆரம்பமாகின்றது.
இந்நிலையில் சுவிட்ஸர்லாந்து ஜெனீவாவில் இருந்து செயற்படுகின்ற முஸ்லிம் அமைப்புக்கள்,
சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து பெருந்தொகையான எதிர்ப்பு ஆவணங்களை ஒன்றிணைத்து ஆணைக்குழுவிடம் சமர்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

