கொழும்பு மாநகர சபையின் மாதாந்த பொது அமர்வில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் மாநகர உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆற்றிய கன்னி உரை

கடந்த 2020 செப்டம்பர் 29 திகதி நடைபெற்ற கொழும்பு மாநகர சபையின் மாதாந்த பொது அமர்வில்,  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் மாநகர உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆற்றிய கன்னி உரை.

155 ஆண்டு வரலாற்றைக் கொண்ட கொழும்பு நகரசபையில் எனது தொடக்க உரையை மத பிரசங்கங்களுடன் தொடங்குகிறேன். 

கௌதம புத்தர் ஞானம் பெற அவர் தியானமிருந்த அரச மரத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக அனிமிச லோச்சனா என்ற பூஜையை செய்தார். இதன் மூலம் கௌதம புத்தர் உலகிற்கு கற்பித்த முதல் பாடம் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்பதாகும். இதே போல்தான், எனது மதத்திலும் நபிகள் நாயகம் முஹம்மது ( ஸல்) அவர்கள் கூறினார் "மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார்."  

அதனால்  எனது உரையை இந்த பொன்மொழியுடன்  ஆரம்பிக்கிறேன்.

கௌரவ மேயர் அவர்களே, இலங்கையின் மிகப்பெரிய மற்றும் பழமையான நகராட்சி மன்றமான கொழும்பு நகரசபைக்கு போட்டியிட்ட ஐக்கிய சமாதான கூட்டமைப்புக்கு 4700 வாக்குகளை வழங்கிய மக்களுக்கு மீண்டும் நன்றியை இந்த சபையில் தெரிவித்துக்கொள்கிறோம்.


 கட்சியின் போனஸ் ஆசனத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சகோதரர் காதர் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், அவர் ராஜினாமா செய்த பின்னர்  இந்த சபையில் நான் அமர வழி கிடைத்தது.


ஏனென்றால், எங்கள் கட்சியின் கொள்கையை மதிக்கும்,  அதே வேளையில் போனஸ் இருக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்திய அவரது தாராள மனப்பான்மையும், அவரது ராஜினாமாவும் அரசியலில் ஈடுபடும் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

உலக அரசியலிலும் தேசிய அரசியலிலும் பல மாற்றங்களைக் குறிக்கும் தலைவர்களை உருவாக்கிய கொழும்பு நகரசபையில் உறுப்பினராக என்னை நியமித்த தலைமைக் சபை மற்றும் உயர் சபை  உள்ளிட்ட  கட்சி உறுப்பினர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


மேலும் கூறுகையில் எனது அரசியல் பயணத்திற்கு ஆதரவு அளித்த எனது பெற்றோர், உடன்பிறப்புகள், மனைவி மற்றும் பிற நண்பர்களை இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூர  இந்த வாய்ப்பையும் பயன்படுத்த விரும்புகிறேன்.

கொழும்பு ஒரு வணிக தலைநகரம் மட்டுமல்ல, மக்கள் ஒற்றுமையுடன் வாழும் ஒரு வரலாற்று நகரமுமாகும். கொழும்பில் வாழும்  பெரும்பான்மை மக்களிடையே இனம், மதம், சாதி, வேற்றுமைகள், பிரிவினைகள் எதுவும் இன்றி வாழ்கின்றனர். ஏனென்றால் அவர்கள் மனிதநேயத்திற்காக ஓரணியில்  நிற்கின்றனர். 

வரலாற்றில் இந்த மாநகர சபை முற்போக்கான மற்றும் தொழிற்சங்க தலைவர்களை உருவாக்கும் தலமாகவூம்  ஒருமைல்கல்லாக அமைந்திருக்கிறது.

மாண்புமிகு அரசியல்வாதிகள் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, விவியன் குணவர்தன, ரொபர்ட் குணவர்தன, ஏ.இ. குணசிங்க, என்.எம். பெரேரா, வின்சன் பெரேரா, சங்கரபிள்ளை சரவணமுத்து, ராசிக் ஃபரீத் போன்ற தேசிய அளவிலான தலைவர்கள் மற்றும் மேயர்களை உருவாக்கிய இந்த மதிப்புக்குரிய  சபையிலிருந்து நான் கூற விரும்புகிறேன், எங்களுக்கு இடையே அரசியல் ரீதியாக வாதபிரதீவாங்கள் இருக்க வேண்டும், மக்களின் பொது நல கருத்தின் அடிப்படையில் தவிர, நாட்டிற்க்கோ மக்களுக்கோ தீங்கு விளைவிக்கும் கொள்கைகளில் அல்ல.


எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற முறையில், நீங்கள் மற்றும் ஆளும்கட்சி நகரசபை உறுப்பினர்கள் மக்களின் நலனுக்காக எடுக்கும் பயனுள்ள முடிவுகளுக்கு எனது பூரண  ஆதரவைஅளித்து உங்கள் அனைவருடன்  கைகோர்க்க நான் தயாராக இருக்கிறேன்.

நீங்கள் மேயராக இருக்கும் காலத்தில் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக இருப்பதில் நான் பேருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஏனென்றால், மேல் மாகாணத்தில் எதிர்க்கட்சித் தலைவர், இராஜாங்க அமைச்சர், மலேசியா தூதரகத்தின் தூதுவர் போன்ற பதவியில் நிறைய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதுபடியால்.

மலேசியாவில் தூதுவராக நீங்கள் இருந்த காலத்தில், மலேசியாவின் பன்முக கலாச்சாரத்தை அவர்கள் எவ்வாறு மதிக்கிறார்கள் என்பதை நீங்கள் கண்டு இருப்பீர்கள்.

அதே போல் கொழும்பு மாநகர சபையும் அனைத்து மதங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. 

உலகெங்கிலும் உள்ள அனைத்து பௌத்தர்களுக்கும் வெசாக் போயா தினம் ஒரு சிறந்த நாள். கௌரவ லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு தமிழ் இனத்தவர், அவர் அந்த நாளை சர்வதேச விடுமுறையாக மாற்ற நடவடிக்கை எடுத்தார். அந்த நாளில், கொழும்பு மாநகர சபை வெசாக் அலங்காரங்களுடன் கொழும்பு நகரத்தை ஒளிரச் செய்வதையும், நகரசபை  மைதானத்தில் வெசாக் பாடல்களை ஏற்பாடு செய்வதையும் பார்த்து இருக்கிறேன். அன்றைய தினம் நகராட்சி மைதானத்தில் மொஹிதீன் பேக் மாஸ்டர் என்ற முஸ்லிமின் பௌத்த பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டுகிறது. 


கொழும்பு மாநகர சபை  இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதையும், கிறிஸ்மஸ் அலங்காரங்களுடன் நகரத்தை வண்ணமயமாக்குவதையும், அன்றைய தினம் நகராட்சி மைதானத்தில் கிறிஸ்மஸ் கரோல் பாடல்களை வாசிப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.


கொழும்பு மாநகர சபை இத்தகைய திட்டங்கள் மூலம் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பற்றிய புரிதலை வழங்கியதனால் நகர மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் வாழ்கின்றனர்.

உலகிற்கு அமைதியான மதத்தை போதித்த நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த நாளை ஒரு வர்த்தக விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது, முஸ்லிம்களின் மற்ற பண்டிகைகளை விட இந்த நாளுக்கு அதிக மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மீலாத் உன் நபி என்ற பெயரில் தேசிய விழாக்களையும் நடத்துகிறது மற்றும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துகிறது

அடுத்த மாதம் 30 ஆம் திகதி நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் வருகிறது. அன்று தேசிய மீலாத் உன் நபி  திருவிழாவை முன்னிட்டு நகராட்சி மைதானத்தில் ஒரு விழா மற்றும், இஸ்லாமிய பக்தி பாடல் இசை நிகழ்ச்சியை நாடாத்தி, மாநகர சபையின்  சுற்றுப்புறங்களை அலங்கரிக்க  வேண்டும் எனவும் நான் முன்மொழிகிறேன். 

அதே போல் இந்துக்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுபோன்ற திட்டங்களை நாடாத்த நான் பரிந்துரைத்து எனது உரையை நிறைவு செய்கிறேன் என்றார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.