மனநலம் காப்பதும் நம் நலமே!!!

மனநலம் காப்பதும் நம் நலமே!!!
சுகம்,நலம்,ஆரோக்கியம் போன்ற சொற்களை நாம் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்துகிறோம்.இவை நம் உடல் சார்ந்த நிலைகளை விபரிக்கவே இவற்றை உபயோகிப்போம்.அதாவது நோய் அல்லது நோயற்ற நிலைகளை விபரிக்க பயன்படுத்துகிறோம்.உடல் சார்ந்த நலத்தை நிர்ணயிப்பதும் நம் மன நலம் என்பதும் நம்மில் பலர் அறிவதில்லையே!!!!! ஏனெனில் உடல் விளைவுகளை இலகுவாக. அடையாளம் காணலாம்.ஆனால் உளம் அல்லது மனம் என்பதனை வெளிப்படையாக கண்டு கொள்வது கடினம். உளநலம் உயர்வாக இருப்பின் அனைத்து அடைவுகளும் அட்டகாசமாக அமையப்பெறும். ஆண்டுகள் பல கடந்து மறுமலர்ச்சி கண்ட நமக்கு மனநலம் காக்க மட்டும் ஏனோ மறந்தே போய்விட்டோம்!!! ஒக்டோபர் மாதம் அதை அழகுற நினைவுப்படுத்துகிறது.அவ்வகையில் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி உலக மனநல தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.இந்நாள் 1992ம் ஆண்டு துவக்கம் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டு வருகின்றது.உலகளாவிய மனநலக் கல்வி,விழிப்புணர்வு,சமூக மனப்பான்மைக்காக வாதிடும் வகையில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.குறிப்பிட்ட கருப்பொருளில் இந்நாள் கொண்டாடப்படுகின்றது.இவ்வாண்டு "அனைவருக்கும் மன ஆரோக்கியம்" எனும் தொனிப் பொருளில் கொண்டாடுகின்றது. அவ்வகையில் மனநலம் தொடர்பாக கவனம் செலுத்துவது நம் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மனித வாழ்க்கை என்பது விசித்திரமானதும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. வாழ்க்கைப் பயணத்தில் எதிர் நோக்கும் சவால்களும் அப்போது நம் மனதினுடைய செயற்பாடும் அவற்றிற்கு ஏற்றதாகவே துலங்களை வெளிப்படுத்துவதினை அவதானிக்கலாம். ஒரு சிலர் இவற்றை கடந்து செல்லலாம் அல்லது அவற்றுடன் வாழக்கற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள மானிடர்கள் அசாதரண நிலையை உணர்கின்றனர்கள் .அச்சந்தர்ப்பத்திலேயே உளநலப்பிரச்சினைகளை எதிர்ப்பட நேரிடுகின்றது. இவ்வகையில். *மனநலம் எனப்படுவது???* ஒருவர் தன்னைத் தன்னோடும் சுற்றியுள்ள பிறரோடு இணைத்துக் கொள்ளும் திறனை குறித்து நிற்கின்றது.WHO இவ்வாறு கூறுகின்றது. "மனநலம் என்பது, வெறுமனே மனநலப் பிரச்சினை இல்லாத நிலை அல்ல.மனநலத்தை நேர்விதமாக வரையறுக்கும் நோக்கத்துடன் முழுமையான உடல் ,மன மற்றும் சமூக நலன் உள்ள நிலை". *உள நலத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்* பரம்பரைக்காரணிகள் , சூழற் காரணிகள் என இருவகையாக நோக்கலாம் 1.பரம்பரைக்காரணிகள் பெற்றோரிடமிருந்து குழந்தையொன்று சந்ததி சந்ததியாக பெற்றுக்கொள்கின்ற இயல்புகளுக்கான காரணிகள் பரம்பரைக் காரணிகள் எனலாம்.ஒருவருடைய தந்தை அல்லது தாயின் இயல்பாகத்தான் இருக்க வேண்டும் அவசியமில்லை.மூன்று அல்லது நான்கு தலை முறையினருக்கு முற்பட்ட இயல்புகள்கூட இவ்வாறு பரம்பரை ரீதியாக பெற்றுக் கொள்ளலாம். இவை ஒருவரின் இயல்புகள், குணாதிசயங்கள்,துலங்கள் முறை போன்ற உளவியல் தன்மைகளுக்கும் பங்குவகிக்கின்றன. 2.சூழற் காரணிகள் உளநலத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளில் சூழற் காரணிகளும் இன்றியமையாதது.பாரம்பரிய இயல்புகளுடன் பிறந்தாலும் அவ்வியல்புகளை வளர்த்தெடுத்தல்,அவ்வியல்புகளை ஒடுக்குதல்,புதிய இயல்புகளை வளர்த்தெடுத்தல் எனப் பல்வகைகளிலும் சூழற் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை உயிரியற் சூழற்காரணிகள் -தாய் ,தந்தை சகோதரர்கள், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள்,பாடசாலைச் சமூகத்தினர்,சகபாடிக்குழுக்கள்,மற்றும் சமூக அங்கத்தவர்கள்,செல்லப் பிராணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெளதிக சூழற் காரணிகள்- வீடு,விளையாட்டு ,விளையாட்டுப் பொருட்கள்,கல்வி,ஆன்மீகம்,அனர்த்ங்கள் பாடசாலை,வேலை,வேலைத்தளம்,என்பன உள்ளடங்குகின்றன. *உளநலம் பாதிப்பதற்கான காரணிகளாவன,* எங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை அல்லது நிலைமைகளை முகங்கொடுக்க கையாள இயலாத போது நம் உளம் பாதிப்புறுகின்றது. மனம் நலம் கெடும் நிலைக்கு ,உறவினர்களின் ஆதரவு கிடைக்காமை,எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பின்மையான நிலைமகள்,வேலைப்பளு,பொருளாதார சிக்கல்கள் ,இழப்புக்கள் என பல்வேறுபட்ட காரணிகள் பங்களிக்கின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வெற்றிடமொன்றை உணர தலைப்படுவர்.இந்நிலை தொடர பாதிக்கப்பட்டவரை அவஸ்தைக்குள்ளாக்கி ,ஆரோக்கியம் குன்றிய நிலைக்கு இட்டுச் செல்லும். _உளநலம் பாதிக்கப்பட்டவரின்_ _அறிகுறிகளாவன_ _உளவியற் அறிகுறிகள்_ •அந்தரம் அல்லது சினம் •ஸ்திரமற்ற நிலை •மன ஒருநிலைப்பாடு குறைதல் •அதிக யோசனை •தன் பிரச்சினையை தெளிவாக •விபரிக்க முடியாத நிலை _உடலியற் அறிகுறிகள்_ •களைப்பு •தலைவலி •தசை இறுக்கம் •பசியின்மை அல்லது அதிக பசி •உடல் நோ(கை கால் குத்துளைவு,நெஞ்சு நோ,நாடிப்பிடிப்பு) •பெண்களில் மாதவிடாய் கோளாறுகள் ஆண்களில் பாலியல் நாட்டம் அல்லது செயற்பாடு குறைதல் _நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள்_ •சக்தி குறைதல் •மது,போதை பொருட்களை உள்ளெடுத்தல் •தொடர்ச்சியாக வேலை செய்வதில் சிரமம் •நித்திரைக் கோளாறுகள் _உறவு முறையில் மாற்றங்கள்_ •வாக்குவாதம்/உடன்பாடின்மை/புரிந்துணர்வின்மை •மற்றவர்களையே தங்கி இருத்தல் இவ்வாறாக பல்வேறு மாற்றங்களினால் உடல் ,உள குணங்குறிகள் தோன்றி மறையும். உள நலப் பாதிப்பானது உடற் செயற்பாட்டை மாற்றி  உடல் ,உள நோய்களை ஏற்படுத்த வல்லது.அவ்வகையில் உளநோய்களினை நோக்கின் சாதாரண உளநோய்கள்- பதகளிப்பு,கண்டித நோய்(எண்ணச்சுழற்சி/OCD),மெய்ப்பாட்டு நோய்கள்(somatization), பாரிய உள நோய்கள்-மனச்சோர்வு(Depression) பித்து(Mania) உளமாய நோய்(psychosis) நாட்பட்ட உளமாய நோய்(schizophernia) என வகைப்படுத்தப்பட்டுள்ளமையையும் அவதானிக்கலாம்.   *உளநல மேம்பாடு*  உளநலத்தை இயலுமான அளவு மேம்படுத்த முயற்சிப்பது அவசியம். உளநலத்தை மேம் படுத்த, •அடிப்படைத் தேவைகளை( தூய நீர் போசாக்கு உணவு ,தூய காற்று,மருத்துவ சுகாதார வசதிகள்)கிடைக்க வகை செய்தல் •குடும்ப சூழல் அன்பானதாகவும் ஆதரவு கொடுப்பதாகவும் ஒற்றுமையானதாகவும் இருத்தல் •பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தல் •அடிக்கடி மாற்றமடையாத உறுதியின சூழல் கிடைக்க வழி செய்தல் •நடந்து முடிந்த மறக்க முடியாத நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ளல் •உடல் உள விருத்திகளில் அக்கறை செலுத்தி பின்னடைவுகள் காணப்படின் தகுந்த நடவடிக்கை எடுத்தல். •இழப்புக்கள்,நெருக்கீடுகள் ஏற்படும் சந்தர்பங்களை ஏற்றுக் கொள்ளல் •தன்னம்பிக்கையுடன் செயற்படல். போன்றன துணை செய்கின்றன.  _உளநல மேம்பாட்டிற்கு உதவி புரிவோர்,_  ஒருவரின் உள மேம்பாட்டிற்கு பல்வேறு மட்டத்தில் உள்ளோர் உதவி புரிகின்றனர். உளசமூக பிரச்சினை உள்ளவரை கதைத்து செளகரியப்படுத்த பாரம்பரிய உளவளத்துணையாளராலு இயலலாம் இன்னும் சில பிரச்சினைகளுக்கு கிராமத்து அதிகாரிகளிடமிருந்து அல்லது உயர் அதிகாரிகளிடமிருந்து உதவி தேவை. வேறு சில சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள்,சமூக ,சமய உதவியாளர்களின் தலையீடு அவசியம். எனவே உரிய சிறந்த வளங்களை தெரிவு செய்து உளநலத்தை மேம்படுத்துவோம்.இனியாவது உளநலம்.சிறக்க வழி செய்வோம்!. ASHRA MINSAR BA (SEUSL) STUDENT COUNSELLER (NISD)
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.