2021 ஆம் கல்வியாண்டிற்கான புது மாணவர்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல்
2021 ஆம் கல்வியாண்டில் மகரகம கபூரியா அரபுக் கல்லூரியில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கூறப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அதற்குக் கீழே தரப்பட்டுள்ள இலக்கத்துக்கு அனுப்பி வைப்பதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். பிறகு குறித்த பகுதிக்கு பொறுப்பாக உள்ள உத்தியோகத்தர் உங்களுடன் தொடர்பு கொள்வார்.
அரபு, இஸ்லாமிய கற்கைநெறிகள், நவீன கல்வி மற்றும் தொழிற்கல்வி போன்ற அனைத்தையும் ஆறு வருடங்களுக்குள் கற்றுக்கொள்வதற்கான ஒரு சிறந்த இஸ்லாமிய நிறுவனத்தை தேடுகின்றவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாக இருக்கும்.
1931 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை வாழ் மக்களுக்கு சேவைகளை செய்துவரும் இக்கல்லூரியானது உலகமெங்கும் புகழ் பூத்தது, இக்கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள் அழைப்புப் பணியில் முன்னோடிகளாகத் திகழ்கின்றனர், இன்னும் சிலர் இலங்கையில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர், இன்னும் சிலர் கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர்கள், இன்னும் சிலர் பிரபல்யம் மிக்க கல்வி நிறுவனங்களின் அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் செயல்படக்கூடியவர்கள், இன்னும் சிலர் தொழிலதிபர்கள். இங்கே கற்பிக்கும் ஆசிரியர் குழாம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற முன்னுதாரணமாணவர்கள்.
ஆகவே இப்படியான ஒரு கல்லூரியில் கற்கின்ற போது அதற்கே உரிய ஆளுமையும் கற்கும் மாணவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.
அல்லாஹ் எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் கல்விச் சூழலைத் தந்தருள்வானாக

