பாராளுமன்ற உறுப்பினர்-றிசாட் பதியுதீன், கொழும்பு, தெஹிவளையில் வைத்துஇன்று காலை குற்றப்புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்டார் என காவல்துறை அறிவித்துள்ளது. 2019இல் இடம்பெற்ற அரச நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அவர் கடந்த 5நாட்களாக காவல்துறையால் தேடப்பட்டு வந்தார். இந்தநிலையிலேயே இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

