இப்படியான அவல நிலைக்கு யார் பொறுப்பானவர்கள்?

இப்படியான அவல நிலைக்கு யார் பொறுப்பானவர்கள்?

அனைத்து வகையிலும் பாதிக்கப்படும் முல்லைத்தீவு மாவட்ட மாணவர்கள்.

நாடளாவிய ரீதியில் கொவிட் 19 தாக்கத்தால் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி சார் நிறுவனங்கள் அனைத்தும்
இயங்கவில்லை. இந்நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி
கற்கும் நிலை ஏற்பட்டது பெற்றோர் எவ்வளவு தான் முயன்றும் சரியான
கற்றல் வழி காட்டல் இல்லாமையால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகின்றது.

கல்வியில் வீழ்ச்சியை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் இணையவழி கற்றல் முறையை ஆசிரியர்கள் மூலமாக அமுல்பபடுத்தியது .
வசதி படைத்த குடும்பங்களிடமே மடிக்கணினிகள் , அதி நவீன கைத்தெலைபேசிகள் உள்ளன அத்துடன் நகரங்களில் உள்ளவர்கள்மட்டுமே இணையவசதியை பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

வட மாகாணத்திலே முல்லைத்தீவு மாவட்டம் இணைய வழிக் கல்வியால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது என குறிப்பிடலாம்
ஏனெனில் இங்கு வாழும் குடும்பங்களில் அதிகமானோர் நாள்கூலி வேலையில் ஈடுபட்டு பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுகின்றார்கள் அத்தகைய குடும்பங்களில் இணையகல்வி கிடைக்காத மாணவர்களும் காணப்படுகின்றனர்

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலே உடையார்கட்டு கிராமத்தில் “சிக்னல்”கிடைப்பதே அரிதாக காணப்படுகிறது உடையார்கடு மகா வித்தியாலய மாணவர்களுக்கு தெரியும் “சிக்னல்” என்ற வார்த்தையின் மதிப்பு அதுமட்டுமா கணினி பாட ஆசிரியர் பல்கலைக்கழக விண்ணப்படிவம் நிரப்புகையில் ” சப்மிற்” என்றதை எத்தனை தரம் கொடுக்க வேண்டியிருந்து இது பற்றி அவரிடம் கேட்டதற்கு ” டவர்” எங்கள் கிராமத்திற்கு அருகில் இல்லாததால் “சிக்னல்” சரியாக கிடைப்பதில்லை என்றும் விளக்கமளித்தார்.

மாணவர்கள் இணைய வசதியை ஏற்படுத்த எத்தனை பெற்றோர்களுக்கு தொழிநுட்பம் பற்றிய பூரண அறிவு இருக்கின்றது அப்படியிருந்தும் அவர்கள் பிள்ளைகளாவது கற்றுக் கொள்ளட்டுமே என்றால் எங்கே தொலைத்தொடர்பு நிறுவனம் தான் “டவர்” போதியளவு அமைக்காமையால் “ஸ்மாட் போன்” இருந்தும் கூட “சிக்னல்” இல்லாமையால் பிள்ளைகளின் இணையவழிக் கல்வி தடைபட்டுக்கொண்டு காணப்படுவதை எண்ணி பெற்றோர் வருந்துகின்றனர்.

அதிலும் பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரையாளர்களிடம் “டவுட்” கேட்டுக்கொண்டிருக்கையில் திடிரென்று பலத்த காற்றின் இரைச்சல் கேட்டால் “சிக்னல்” தேடி காணியின் பின் பகுதியில் அமரந்திருக்கிறேன் என்று சமாளிக்கவும் வேண்டும் இதிலும் “பைல் அடாச்” பண்ண வேண்டும் என்றால் சுத்தி சுத்தி முடியுறதுக்குள்ள காலம் போயிடும் என்ற மோசமான நிலை உடையார்கட்டு மாணவர்களிடையே இருப்பதை காணமுடிகிறது.

உடையார்கட்டு மாணவர்கள் எவ்வளவு தடைகள் இருந்தாலும் விடாமுயற்சியோடு கற்று வெற்றியும் பெற்றுள்ளார் இனியும் வெற்றி காண்பார்கள் என்பது ஒருபோதும் மாறாது.
கரையில்லாத கல்வியை குறையில்லாமல் கற்றால் உலகம் நம்மை வாழ்த்தி வணங்கும்.

-Suresh Diroja-
(Student of social worker)
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.