கிராமங்களில் அபிவிருத்திகளை செய்து கொள்ள ஆளும் கட்சியோடு இணைந்து கொள்ளுங்கள்.


உங்களது கிராமங்களில் அபிவிருத்திகளை செய்து கொள்ள ஆளும் கட்சியோடு இணைந்து கொள்ளுங்கள். எதிர்கட்சிகளோடு இணைந்து செல்வதனால் கிராமங்களில் எவ்வித அபிவிருத்திகளும் நடக்கப்போவதில்லை.

என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய தலைவர், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம் உவைஸ்  தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய தலைவர் , ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எ.எல். எம் உவைஸ் ஆகியோரின் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாட்டும் போதே  அவர் இதனை குறிப்பிட்டார்.

 மேலும் கூறுகையில், திருகோணமலை மாவட்டத்தில்  ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் எனவே ஆளும் கட்சிகளுக்கு வாக்களித்து திருகோணமலை பிரதேசத்திற்கான அபிவிருத்திகளை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் இந்த மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்றி  இளைஞர்கள் , வாலிபர்கள்  இருக்கின்றனர், திருகோணமலை மாவட்டத்தில் சரியானதொரு அபிவிருத்திகள் இல்லை எனவே இம்முறை நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியிலிருந்து இருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி சரியான பதவிகளை பெற்றுக் கொடுத்து  உங்கள் தேவைகளை ஆளும் கட்சியிலிருந்து நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்றார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.