ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் , முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் A.L.M உவைஸ் ஹாஜியாரின் தலைமையின் கீழ் ஜூலை (22) கொழும்பு மருதானையில் அமைந்துள்ள சுசில் பேர்மஜயந்த அவர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயம் முன்னாள் அமைச்சர் சுசில் ப்ரேமஜயன்த்த மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களினால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
இதில் முன்னாள் நகராதிபதி உமர்காமில், மாத்தலை முன்னாள் நகராதிபதி ஹில்மி கரீம், கொழும்பு மா நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ மற்றும் தோனி அவர்களும் ,ஏனைய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

