மதவாக்குள பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம். .

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய தலைவர் கௌரவ சஜித் பிரேமதாசா கலந்து  கொண்ட மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம்
நேற்று 18ம் திகதி மதவாக்குள பிரதேசத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  ஐக்கிய மக்கள் சக்தியின் மதவாக்குள அமைப்பாளர் அல் ஹாஜ் நஸீர் அவர்களினால் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய தலைமையிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.


மறைந்த முன்னாள் அமைச்சர் அஷோக வடிகமங்காவ அவரின் சகோதரர் காமினி வடிகமங்காவ தலைமையில்  இடம் பெற்ற
இக்கூட்டத்தில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற  புத்தளம் மாவட்ட வேட்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், மதகுரு மார்கள், ஆதரவாளர்கள், ஊரின் முக்கியஸ்தர்கள், வாலிபர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.