"செழிப்புமிக்க வீட்டுத்தோட்டம்" என்ற புதிய திட்டம் அரசினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றுநோய் தொடர்ந்து நாட்டில் உணவு உற்பத்தியை விரைவுபடுத்தும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

"செழிப்புமிக்க வீட்டுத்தோட்டம்" என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் விவசாய திணைக்களம், விவசாய அபிவிருத்தி திணைக்களம், மற்றும் மகாவெலி அதிகாரசபை போன்றவற்றின் பங்களிப்புடன் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இந்த திட்டத்திற்கு saubagya.lk என்ற வலைத்தளம் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இவ்வலைத்தளத்தில் வீட்டு தோட்டத்திற்கு தேவையான விதைகள், உரம் மற்றும் தாவரங்களை பெற்றுக்கொள்ள முடிவதோடு தேவையான ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த திட்டத்தின் மூலம் ஒரு மில்லியன் வீட்டுத் தோட்டங்களை உருவாக்க அரசாங்கம் விரும்புகிறது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு உங்கள் அருகில் உள்ள விவசாயிகளுக்கு அறிவியுங்கள்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.