கானல் நீர்

கானல் நீர்

கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை என்றார் ஒளவையார் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 17ம் திகதி உலக வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உணவின்மை மட்டும் வறுமை அல்ல. கல்வியின்மைஇ சுகாதாரமின்மைஇ வேலையின்மைஇ போதியளவு போக்குவரத்தின்மைஇ கைவிடப்பட்ட ஆதரவற்ற நிலை இவைகள் கூட வறுமையின் அடையாளங்களே. பொதுவாக வறுமை என்பது அடிப்படை மனித உரிமையின் இழப்பாகும். அந்த வகையில் இலங்கையில் வறுமை என்பது வலுவான பொருளாதார வளர்ச்சி காரணமாக தொடர்ச்சியாக குறைவடைந்து செல்கின்றது. இருப்பினும் சில பிரதேசங்கள் இன்னும் அபிவிருத்தி நிலையை அடையாமலே இருக்கின்றன.


யாழ்ப்பாண மாவட்டத்திலே சுண்ணாகம் தெற்கு பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களை எதிர் நோக்கி வருகின்றனர். சுமார் 500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மயிலிட்டிப் பிரதேசத்திலிருந்து 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்து பல பிரதேசத்தில் வசித்து இறுதியாக யாழ்ப்பாணத்தில் சுண்ணாகம் பிரதேசத்தில் தஞ்சமடைந்தனர். சுமார் 28 வருடங்களாக இவர்கள் இவ்வாறு இன்னல் படுகின்றனர். இதில் பலர் தங்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். ஆனால் சிலரின் நிலை கானல் நீராகவே காணப்படுகின்றது.
கண்ணகி முகாம் இ சபாபதிப்பிள்ளை முகாம் என இரு முகாம்கள் காணப்படுகின்றன. தற்பொழுது இங்கு சுமார் 50ற்கு மேற்பட்ட குடும்பங்கள்; உள்ளன. இவர்களது காணிகள் யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள இடத்தினை அண்டிய பிரதேசத்தில் அகப்பட்டுள்ளது. இங்கு வாழ்கின்ற மக்கள் தமது சொந்த வீடுகளை இழந்து பாதுகாப்பற்ற குடியிருப்புக்களில் தங்களது வாழ்க்கையை நடாத்துகின்றனர். மற்றும் தங்களது நாளாந்த தேவைகளை இக்கட்டான சூழ்நிலைகளிலே நிறைவேற்றி கொண்டிருக்கின்றனர். சில சமயங்களில் உண்ண உணவின்றி இவர்கள் இன்னல் படுகின்றனர். ஏன் இந்த நிலை இவர்களுக்கு என்ன தவறு செய்தார்கள்?
இங்கு வாழ்கின்ற மக்கள் மீன்பிடி மற்றும் சிறு கூலி வேலை போன்ற வேலைகளின் மூலமே தங்களது ஜுபனோபாய தொழிலை நடாத்தி வருகின்றனர். ஆனால் தங்களது தொழிலினை விருத்தி செய்யும் அளவிற்கு சரியான பொருளாதார வசதி இல்லை. மனிதனின் அடிப்படைத் தேவையான சுகாதார தேவைகள் கூட இங்கு நிறைவேற்றப்படவில்லை. தங்க ளுக்கென சொந்தமான கழிப்பறைகள் இங்கு இல்லை. பொது கழிப்பிடங்களையே பயன்படுத்தி வருகின்றனர். இங்கு வாழ்கின்ற சிறுவர்கள் தங்களது பொழுதுபோக்கினை போக்குவதற்கு கூட ஓரு சிறந்த மைதானம் இங்கு இல்லை. அத்துடன் மனிதனின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான நீர் தேவைகூட இங்கு ஓரு குறையே. இவ் இரு முகாம்களுக்கும்
இரண்டு நீர்த்தாங்கிகள் மட்டுமே இருக்கின்றன. தங்க ளது முழு நாளுக்குமான நீரினை நீண்ட தூரத்தில் இருந்து கொண்டு வந்தே பயன்படுத்தி வருகின்றனர்.
இங்குள்ள மக்கள் தங்க ளது பெரிய வீடுகளையும்இ காணிகளையும் இழந்து இவ் முகாமில் சிறிய பரப்பு காணியில் வசிக்கின்றனர். இவ்வாறு இருக்கும் போது சுதந்திரமாக தங்களது வேலைகளை செய்ய முடியாது இன்னல் படுகின்றனர். பக்க த்து வீட்டில் உள்ளவர்கள் சத்தமாக தொலைக்காட்சி பார்க்கும் போதோ பாடல் போடும் போதோ மற்றைய வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு கற்றல் நடவடிக்கையை மேற்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது.
மாரி காலங்களில் வெள்ளம் காரணமாக நுளம்புப்பெருக்கம் அதிகரித்து நிமோனியாஇ மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்படும் மக்களை அனுமதிப்பதற்கென ஒரு நிரந்தர வைத்தியசாலை இங்கு இல்லை.
இது இவ்வாறு இருக்கையில் அதிகாரிகள் சிலர் வீட்டுத்திட்டம் எனும் பெயரில் வீட்டின் அடித்தளத்தை இடுமாறு கூறுகின்றனர். ஆனால் இம் மக்களிடம் அடித்தளத்தை இடும் வசதி இவர்களுக்கு இல்லை. இதன் காரணமாக உடைந்த சிறிய வீடுகளிலேயே வசித்து வருகின்றனர்.
மாறுமோ இந்த நிலை.எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மக்கள்.


S.Jenusha 
Trincomalee Campus, Eastern University of Sri Lanka
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.