மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்ட தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் அகில இலங்கை மக்கள் காங்ரஸினால் புத்தள மாவட்ட ACMC அமைப்பாளருக்கு வழங்கிய விசேட நிதி ஒதுக்கீட்டினால் கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது.
0
March 04, 2020
கௌரவ முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்கள் புத்தள மாவட்ட அமைப்பாளரான அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கு வழங்கிய விசேட நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்ரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 14 இலட்சம் ரூபா பெறுமதியானதாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவர், அமைப்பாளர், மற்றும் உறுப்பினர்களுக்கும் தெரிவித்து கொள்கின்றனர்.
ஊடகவியலாளர்
சில்மியா யூசுப்.




