9ஆவது கலாச்சார பண்பாட்டு கண்காட்சி (இஸ்லாமிய பல்கலைக் கழகம்,மதினா-சவூதி அரேபியா )

9ஆவது கலாச்சார பண்பாட்டு கண்காட்சி
(இஸ்லாமிய பல்கலைக் கழகம்,மதினா-சவூதி அரேபியா )


"STUDENTS CULTURAL FESTIVAL" வழமை போன்று இவ்வருடமும் மதீனா பல்கலைக்கழகத்தின் 2020.02.24 /03.09 திகதிகளில், மாணவர்களினால் நடாத்தப்படவுள்ளது.
சுமார் 104 நாடுகளின் கலாச்சார பண்பாட்டு விழுமிய ஆடைகள்,சிற்றுண்டி உணவுகள், குடிபானங்கள், மற்றும் தத்தமது நாட்டுக்கு மட்டுமே உரித்தான அம்சங்கள் போன்றவைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இம்மாபெரும் கண்காட்சியில்  “இலங்கை நாட்டு மாணவர் ஒன்றியத்தின்” மூலம் எமது நாட்டு கலாச்சார பண்பாட்டு அம்சங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

மேலும் எந்த நாட்டு மாணவர்கள் தங்களது நாட்டு கலாச்சார அம்சங்களை நல்ல முறையில் காட்சிப்படுத்தி, அதிகமான பார்வையாளர்களின் ஆதரவை பெறுகின்றார்களோ     அந்த அடிப்படையிலேயே 1ம்,2ம்,3ம் நிலைகள் வழங்கப்படும் என குறித்த பல்கலைக்கழக மாணவன் ZAKARIYA ABDUL HAADHI இனால் அறியத்தரப்பட்டுள்ளது.
(புகைப்படம்- Zakariya Abdul Haadhi)







Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.