"அமானியனஸ்" கிண்ணத்தை சுவீகரித்தது 2000 ஆம் ஆண்டு அணியினர்

""அமானியனஸ்" கிண்ணத்தை சுவீகரித்தது 2000 ஆம் ஆண்டு அணியினர்

( ஐ. ஏ. காதிர் கான் )

   2020 ஜனவரி 10,11 மற்றும் 12 ஆம் திகதிகளில்  தொடர்ச்சியாக 3 நாள் இடம்பெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டித் தொடரில்,
மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலய  பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
27 அணிகளுக்கு  இடையில் இடம்பெற்ற இப் போட்டி நிகழ்வு, அல் - அமான் விளையாட்டுத் திடலில் இடம்பெற்றது.  இறுதிப்போட்டி நிகழ்வில், 2010 ஆம் ஆண்டு அணியும் 2000 ஆம்  ஆண்டு  அணியும்  மோதிக்கொண்டன.
   இதில் 2000 ஆம் ஆண்டு அணியினர், "அமானியனஸ்" கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.
2010 ஆம் ஆண்டு அணியினர்  (Runners Up), இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.