பலமான எதிர்கட்சியாக செயற்படுவோம் – இம்ரான் எம்.பி

பலமான எதிர்கட்சியாக செயற்படுவோம் – இம்ரான் எம்.பி

ஐக்கிய தேசிய முன்னணி என்றவகையில் தாம் ஒன்றிணைந்து பலமான எதிர்கட்சியாக செயற்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இன்று எதிர்கட்சி தலைவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி என்றவகையில் தாம் ஒன்றிணைந்து பலமான எதிர்க்கட்சியாக செயற்படுவோம் அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல திட்டங்களுக்கு நாம் ஆதரவளிப்போம்.

விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்பட வேண்டும், MCC உடன்படிக்கை குப்பையில் எறியப்பட வேண்டும், இந்நாட்டின் ஒரு அங்குல நிலம் கூட வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய கூடாது என  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் தேர்தல் விஞ்சாபனம் மற்றும் தேர்தல் மேடைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் எமது பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்.

கடந்த காலங்களில் விட்ட தவறுகளை சரி செய்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையினை பெற பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.