இலங்கையின் 16 மாவட்டங்களில் இருந்து ஊடகப் படையணி புலமை பரிசில் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 35 இளம் ஊடகவியலாளர்கள் முதல் கட்டமாக 05 நாள் பயிற்சி நெறியில் பங்கு பற்றி இருந்தனர்.
USAID ஆதரவுடன், சர்வதேச ஆராய்ச்சி பரிவர்த்தனை வாரியம் (IREX) ஜனநாயக இலங்கைக்கான ஊடக வலுவூட்டலின் (MEND) இத்திட்டத்தை இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம், ( SDJF) ஏற்பாடு செய்த இப்பயிற்சி நெறியானது கடந்த 2019.10.17 ம் திகதி 05 நாள் வதிவிட பயிற்சியுடன்
நீர்கொழும்பு, போரதொட்ட வீதியில் அமைந்துள்ள -Goldi Sands ஹோட்டலில், நடாத்தப்பட்டது.
இதன் போது சமாதான ஊடகவியல், முரண்பாட்டு ஊடகவியல், ஊடகவியல் தொழில் தர்மம், மற்றும் பாலுணர்வு ரீதியான அறிக்கையிடல் போன்ற தலைப்புக்களில், கலந்துரையாடல்களும், விவாதங்களும் இடம் பெற்றன.
மேலும் தற்போது இலங்கையில் பிரபல்யம் அடைந்து வருகின்ற மோஜோ பற்றிய பயிற்சியில் அடிப்படை காட்சி அமைப்பு, மூன்றாவது விதி, கெமரா மூமென்ட்ஸ், காட்சி தொடரமைப்பு, கதை உருவாக்கம் போன்ற தலைப்புக்களில் நடைமுறைப்பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் அவற்றை பரீட்சித்து பார்ப்பதற்கு 1 நாள் விஜயமும் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பயிற்சியாளர்கள் தங்களது தொலைபேசியினை பயன்படுத்தி 34 சிறு வீடியோ கதைகளை உருவாக்கி அவற்றை தங்களது சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இதனை கருத்திற் கொண்டு மக்களின் பிரச்சினைகளை சமூகத்திற்கு கொண்டு வரல், நாட்டில் இளம் ஊடகவியலாளர்களை மையமாக கொண்டு சமாதான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் போன்றன இதன் நோக்கமாகும் என இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தின் பணிப்பாளர் மொஹமட் அஸாட் தெரிவித்தார்.
இப் பயிற்சிநெறியில் பிரபல ஊடக நிபுணர்களான கே .டப்லியு. ஜனரஞ்சன ,ராதிகா குணவர்த்தன, கே. சாரங்க, ஷான் விஜயதுங்க மற்றும் விடிவெள்ளி ஆசிரியர் மொஹமட் பைரூஸ், போன்றோர் பங்குபற்றியமை குறிப்பிடதக்கது.
இப்பயிற்சியின் நிறைவில் இளம் ஊடகவியலாளர்கள் தங்களது கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகளுக்கு முற்றாக மாறுபட்ட கலாச்சார மத நம்பிக்கையுள்ள நண்பருடன் இணைந்து 07 நாட்கள் தங்கி இருந்து குறுக்கு கலாச்சாரங்களை புரிந்து கொள்வதற்கு முயற்சிப்பதுடன் , இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற வகையில் கதைகளை உருவாக்கி அதன் மூலம் தேசிய உரையாடலை ஏற்படுத்துவார்கள் என எதிர் பார்ப்பார்கப்படுகிறது என்பது ஒரு குறிப்பிடதக்க விடயமாகும்.
ஊடகவியலாளர் சில்மியா யூசுப்






