மாவனல்லை ஸஹிராவில் புத்தக வெளியீட்டு விழா
மாவனல்லை ஸஹிராக் கல்லூரியில் தேசிய வாசிப்பு மாதம் 2019 ஐ அடையாளப்படுத்தும் முகமாக அண்மையில் READING CLUB இனால்
புத்தக வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு 228 புத்தகங்கள் வெளியீட்டு வைக்கப்பட்டது.
மும்மொழியிலுமாக கவிதை ,கட்டுரை சிறுகதை என ஸஹிராக் கல்லூரியின்
தரம் நான்கு தொடக்கம் உயர்தரம்வரையான மாணவர்களால் 28 ம் திகதி இப்புத்தங்கள் வெளியிட்டு வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் அதிபர் ஜவாத் ,உப அதிபர்கள் ,பழைய மாணவர்கள் xzahirians அங்கத்தவர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆசிரியர் குழாம், மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
.
Binth ameen( seusl)



