மனிதனை உலகில் படைத்த அல்லாஹ் தலா. அவன் வாழ்வாங்கு வாழ அழகான வாழ்வியலை ஏற்படுத்தினான்.கண் விழித்ததது முதல் உறங்கும் வரையான நேரத்தை அழகாக திட்டமிட்டு தந்துள்ளான்
ஷைத்தானின் வலையால் பின்னப்பட்ட இவ்வுலகை வென்று வாழ மனிதனுக்கு பாரியதொரு ஈமானிய சக்தி தேவைப்படுகின்றது.மனிதன் செய்யும் நற்கரியங்களையும் சீர்குலைப்பதே ஷைத்தனின் குறிக்கோளகும்.அந்த தலையிட்டில் இருந்து மனிதனை பாதுகாக்கும் அரண்ஆகவே இறைவன் சந்தர்ப துஆக்களை அருளியுள்ளான்.
உ+ம் - இருள் சூழும் முதல் இருள் அகழும் வரை
உறக்கத்திலிருந்து விழித்தது முதல் கண் உறங்க செல்லும் வரைஉள்ள சகல சந்தர்பங்களுக்குமான துஆக்கள் எம் வசம் உள்ளன.கையில் விளக்கை வைத்து கொண்டு இருளை நோக்கி போவது போல். துஆக்களை வைத்து கொண்டு மறதியில் நாம் ஒதத் தவறுகிறோம்.
அடியானினதும் அல்லாஹ்வினதும் உறவின் பாலமான இந்த துஆக்களை ஒதுவதனால் எமக்கு பல வெகுமதிகள் கிடைக்கின்றன. அவற்றுள் சில
- அல்லாஹ்வின் நெருக்கம் கிடைக்கின்றது
- ஷைத்தானின் தீங்குககளில் இருந்து பூரண பாதுகாப்பு கிடைக்கின்றது
- பாவமான காரியங்களில் ஈடுபடுவதை விட்டும் எம்மை பாதுகாக்கின்றது.
- செய்யும் காரியங்களை நேர்தியாகவும் திறன் பட செய்ய முடிகின்றது.
- துஆக்களின் பிராகாரம் காரியங்கள் ஆரம்பிக்கப்படும் போது பேர் அருள் சூழ்ந்து கொள்வதோடு ஆத்ம திருப்தி கிடைக்கின்றது.
Azra Ameer Hamza

