உலக கவிஞர் மாநாட்டில் உயர்விருது பெறும் கவிஞர் பொத்துவில் அஸ்மின்


கம்போடியா அங்கோர் தமிழ் சங்கமும்    கம்போடியா அரசின் கலை, கலாசார அமைச்சும் இணைந்து நடாத்தும் உலக தமிழ்  கவிஞர்கள் மாநாடு  இம்மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கம்போடியா சியம்ரீப் மாநிலத்தில்  நடைபெறவுள்ளது.

இலங்கை, இந்தியா மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்பட 40 நாடுகளில் இருந்து 500 தமிழ் கவிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக கம்போடியா நாட்டின் துணை பிரதமர், சியம்ரீப் மாநில கவர்னர் மற்றும் பாடலாசிரியர்களான பா.விஜய்,விவேகா,ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இம்மாநாட்டில் கம்போடியா கலாசார அமைச்சினால் இலக்கியத்துக்கான உயர் விருது வழங்கப்பட்டு  கவிஞரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின்  கெளரவிக்கப்படவுள்ளார்.

இரண்டு தசாப்த காலத்துக்கும் மேலாக கலை ,இலக்கிய, ஊடகத்துறையில் தடம்பதித்துவரும்  பொத்துவில் அஸ்மின்
இலங்கை அரசினால் அண்மையில் இலக்கிய துறைக்கான 'கலைச்சுடர்' விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கம்போடியா சென்று வருவதற்கான அனுசரணையினையை பிரபல தொழிலதிபர் எம்.சி. பஹருதீன் ஹாஜி அவர்கள்  வழங்கியுள்ளார்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.