கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - பற்களைக் காட்டுவதில் தவறில்லை!


நீரிழிவு பிரச்னை இருப்பவர்கள், பல் தொடர்பான கோளாறுகளுக்கு, சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது, என்று தவறாக எண்ணுகின்றனர். இதனாலேயே, சிறிய பல் பிரச்னையும், பெரிதான பின், வேறு வழி இல்லாமல், பல் டாக்டரிடம் வருகின்றனர்.

சர்க்கரைக் கோளாறு இருந்தால், சிகிச்சையின்போது, பிரத்யேக கவனம் தேவை என்பது மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். எனவே, நீரிழிவு கோளாறு இருக்கும் விபரத்தை, மறைக்காமல் டாக்டரிடம் சொல்ல வேண்டும்; சிகிச்சைக்கே செல்லக் கூடாது என்று நினைப்பது சரியல்ல.
ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், ஈறுகளில் பிரச்னை வரலாம்; ஈறுகளில் தொற்று இருந்தால், ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும்; இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை.

உணவு கட்டுப்பாடு உள்ளது; உடற்பயிற்சி தவறாமல் செய்கிறீர்கள்; ஆனாலும், ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது என்றால், கண்டிப்பாக, ஈறுகளின் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
உடம்பில் எந்த இடத்தில் தொற்று இருந்தாலும், சர்க்கரை கோளாறு வரலாம்.
கர்ப்பிணிக்கு, நீண்ட நாட்களாக வாயில் தொற்று இருந்தால், குறை பிரசவம் ஏற்படலாம். பற்களில் ஏற்படும் தொற்று, இதய வால்வுகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

டாக்டர் வி.சுரேஷ், பல் சிறப்பு மருத்துவர், சிம்ஸ்,
சென்னை.
98944 53115
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.