கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியில் சிறுவர் தின விழா
சில்மியா யூசுப்
கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விசேட கொண்டாட்ட நிகழ்வுகள் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றன.
கல்லூரி அதிபர் திருமதி என். ஷானியா டேன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை நிர்வாகக் குழு, பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDC), பாடசாலை நிர்வாக செயற்குழு (SDEC) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சிறுவர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் விளையாட்டுத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேடை நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அதிபர் என். ஷானியா டேன், சிறுவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவதும், அவர்களிடம் காணப்படும் தனித்துவமான திறமைகளை இனங்கண்டு அவற்றைச் சரியான முறையில் வழிநடத்துவதும் பாடசாலையினதும் சமூகத்தினதும் முக்கிய பொறுப்பாகும் எனத் தெரிவித்தார். அத்துடன், நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
சில்மியா யூசுப்








