(எம்.என்.எம்.அப்றாஸ்)
சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முயற்சியாண்மை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக மாற வேண்டும் அவ்வாறு இல்லாவிடின் வறுமையானது ஒருநாளும் ஓழிக்கப்படாது என அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எல்.எம்.சப்ராஸ் தெரிவித்தார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கிற்கமைய சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் மக்களை சுயபலத்தின் ஊடாக கூடிய வருமானம் பெறுவோர்களாக ஆக்கும் பொருட்டு சமுர்த்தி நிவாரணம் பெறுவோரின் சமகால நிலைமையினை இனங்கண்டு மனைப் பொருளாதார அலகினை பலப்படுத்தும் வேலைத்திட்டம் கல்முனைக்குடி சமுர்த்தி வலயத்தில் இன்று (21 இடம்பெற்றது.
கல்முனைக்குடி சமூர்த்தி வலய வங்கி முகாமையாளர் மோஸஸ் புவிராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாயாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் ,
நாங்கள் மாற்றத்துக்கு உரியவராக முகவர்களாக மாற வேண்டும்.
சமூர்த்தி என்பது முத்திரை வழங்கும் திட்டம் அல்ல மாறாக தங்கி வாழ்பவர்களே உருவாக்கக்கூடிய திட்டமும் அல்ல
இது முயற்சியாளர்களாக மாற்ற
கூடியதொன்றாகும்
சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முயற்சியாண்மை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக மாற வேண்டும் அவ்வாறு இல்லாவிடின் வறுமையானது ஒருநாளும் ஓழிக்கப்படாது .எதிர்வரும் வருடம் சமூர்த்தி திணைக்களத்தினால் பாரிய வேலைத் திட்டங்கள் நடை முறைபடுத்தப்படவுள்ளது இதற்கமைய இவ்வாறான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது
வறுமை ஒழிப்பு ஆனது என்னாளோ பிரதேச செயலாளராலோ சமூர்த்தி உத்தியோகத்தராலோ தனியாக செய்யக்கூடிய வேலை திட்டம் அல்ல இது ஒரு கூட்டு வேலைத் திட்டமாகும் இதற்கு எல்லோரின் பங்களிப்பும் மிக அவசியமானதாகும் என்றார்.
இதன்போது சமூர்த்தி பயனாளிகள் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கொடுப்பணவகள் வழங்கல் ,வீட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த வீட்டுத் தோட்ட பயிர் செய்கை கன்றுகள் வழங்கப்பட்டதுடன்
சமூர்த்தி சீட்டிழுப்பு நிதியத்தின் கீழ் வெற்றி பெற்ற பயனாளிகளுக்கு வருமான கருத்திட்ட பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா அனர்த்தத்தின் போது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய உயர் அதிகரிகள் இதன்போது கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் , பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலிஹ் , சமூர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எம் எஸ் நயீமா, சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.றிபாயா, மருதமுனை, நற்பிட்டிமுனை வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம் முபீன்,உதவி முகாமையாளர்களான எஸ்,எல் அஸீஸ்,எம் ரி தெளபீக், எம்.எம்.எம் மன்சூர்,சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இதேவேளை சமூர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களை இணங்கண்டு மதிப்பீடு செய்யும் கள ஆய்வு வேலைத்திட்டம் கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்முனைக்குடி-01 கிராம பிரிவில் அன்றையதினம் இடம்பெற்மை குறிப்பிடத்தக்கது.





