சில்மியா யூசுப்
மலேசியன் யுனிவேர்ஸல் கல்லூரியின் 10 வது ஆண்டு நிகழ்வும் வருடாந்த பட்டமளிப்பு விழாவும் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் திகதி காலை 9.30 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மலேசியன் யுனிவேர்ஸல் கல்லூரியின் பணிப்பாளர்களான திருமதி சப்ரினா பாரிஸ் ,பஸ்லான் முஹம்மட், மற்றும் உதவி பணிப்பாளர் சகீகா பாரிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஹாசிம் உமர் ஏனைய பிரதி நிதிகளாக முன்பள்ளி பாடசாலை பணிப்பாளர் மஹிந்த கொடிதுவகு, மூன்றாம் கல்வி நிலை உதவி பணிப்பாளர் சமன் விக்ரமசிங்க, தினகரன் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் சென்தில்வேலவர் மற்றும் IELTES பயிற்சியாளர் வசீம் லதீப் ,மற்றும் ஏனைய பிரதிநிதிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இப் பட்டமளிப்பு விழாவில் 50 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்லோமா சான்றிதழ்களும்,10 ஆங்கில டிப்லோமா பாடநெறி சான்றிதழ்களும்,5 மாணவர்களுக்கு உயர் சான்றிதழ் பட்டமும் வழங்கி கொளரவிக்கப்பட்டன.