IMF குழு நாளை இலங்கை விஜயம்


சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) பணியாளர்கள் குழுவொன்று நாளைய தினம் மே 11 முதல் மே 23 வரை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

2023 இவ்வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, இலங்கையுடன் வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசனும் இந்த பயணத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.